மொபைல் போன் ஆப் துணை இல்லாமல் வாட்ஸ்ஆப் மூலமாக ரெயில் பயண தகவல்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎன்ஆர் விவரம் தொடங்கி அடுத்த ரெயில் நிலையம் எது என்பது வரையில் அனைத்து தகவல்களையும் பயணிகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் ரெயில் பயணம் என்றால் ‘அடுத்த ஸ்டேஷன் எது?’, ‘இந்த ஸ்டேஷன் எப்போது வரும்? என தெரிந்து கொள்ள ஸ்மார்ட்போனில் பிரத்யேக செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டியது அவசியம். இந்த நிலையில், அந்தத் தகவல்களை ஸ்மார்ட்போன் செயலி இல்லாமல் வெறும் வாட்ஸ்ஆப் மூலமாக பெறலாம் என்கிறது மும்பையை சேர்ந்த ரெயிலோபை (railofy) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்.
இதற்கென பிரத்யேக வாட்ஸ்ஆப் சாட்பாட்டை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது பிஎன்ஆர் நிலவரம், தாங்கள் பயணிக்கும் ரெயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ரெயில் நிலையம், முந்தைய ரெயில் நிலையம் போன்ற தகவல்களை பெறலாம். இதற்கு பயணிகள் தங்களது பத்து இலக்க பிஎன்ஆர் எண்ணை வாட்ஸ்ஆப் சாட்பாட்டில் பதிவிட வேண்டியது தான்.
- முதலில் அந்த ஸ்டார்ட்ஆப் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணான +91-9881193322 என்ற எண்ணை பயணிகள் தங்கள் போனில் சேமித்து கொள்ள வேண்டும்.
- பின்னர் அதனை வாட்ஸ்ஆப் சாட்டில் ஓபன் செய்ய வேண்டும்.
- அதில் பயணிகள் தங்களது பிஎன்ஆர் எண்ணை பதிவிடவேண்டும்.
- அப்படி செய்தால் பயணிகளுக்கு வாட்ஸ்ஆப்பில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் ரெயில் தகவல்கள் கிடைக்கும்.
- பயணத்திற்கு முன்னதாக பயணிகள் இதில் பிஎன்ஆர் எண்ணை பகிர்வதன் மூலம் ரெயில் குறித்த உண்மை நேர விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
- அதாவது பயண நேர மாற்றம் குறித்த அப்டேட் தொடங்கி அனைத்தும் இதில் அடங்கும்.
கடந்த ஆகஸ்ட் வாக்கில் இதே போல வாட்ஸ்ஆப் மெசேஜிங் சேவை மூலம் ரெயில் பயணிகள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டது.