TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் மணிமேகலை விருதினை பெற்றிட தகுதியுடைய சுயஉதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள்,
வறுமை
ஒழிப்பு
சங்கங்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள
சுய
உதவிக்
குழுக்கள்,
ஊராட்சி
அளவிலான
கூட்டமைப்பு,
வட்டார
அளவிலான
கூட்டமைப்பு,
கிராம
வறுமை
ஒழிப்பு
சங்கங்கள்,
நகா்ப்புறங்களில்
உள்ள
சுய
உதவிக்
குழுக்கள்,
பகுதி
அளவிலான
கூட்டமைப்பு,
தொகுதி
அளவிலான
கூட்டமைப்பு
ஆகிய
அமைப்புகளுக்கு
மணிமேகலை
விருது
வழங்கப்பட்டு
வருகிறது.
2022-2023ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதினை பெற்றிட தகுதியுடைய சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள்,
வறுமை
ஒழிப்பு
சங்கங்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இதற்கான
தகுதிகள்
குறித்து
தமிழக
அரசு
வழிகாட்டு
நெறிமுறைகளை
அறிவித்துள்ளது.
இந்த விருது பெறுவதற்கான விண்ணப்பத்தை
ஜூன்
25ம்
தேதிக்குள்
அனுப்ப
வேண்டும்.
மாதந்தோறும்
கூட்டங்கள்
நடத்துவது,
குழுவின்
சேமிப்பு
தொகையை
முறையாக
செலவிடுவது,
வங்கியில்
கடன்
பெறுவது,
குழு
உறுப்பினா்கள்
பொருளாதார
நடவடிக்கைகளில்
ஈடுபடுவது,
திறன்
வளா்ப்பு
பயிற்சி,
வாழ்வாதாரம்
சார்ந்த
பயிற்சி,
சமூக
மேம்பாட்டு
பணிகளில்
மக்கள்
அமைப்புகளை
ஈடுபடுத்துவது
ஆகிய
6 காரணிகளின்
அடிப்படையில்
தர
மதிப்பீடு
செய்யப்பட்டு
மாவட்ட,
மாநில
அளவில்
விருதுகள்
வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு,
திட்ட
இயக்குநா்,
தமிழ்நாடு
மாநில
ஊரக,
நகா்ப்புற
வாழ்வாதார
இயக்கம்,
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகம்,
வேலூா்
-9 என்ற
முகவரியில்
தொடா்பு
கொள்ளலாம்.