கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.