மாநில அளவிலான திருக்குறள் பேச்சு ஓவிய போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாநில அளவிலான திருக்குறள் பேச்சு ஓவிய போட்டிகள் வேலூரில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் பேச்சு ஓவியப் போட்டிகள் தமிழகம், புதுச்சேரி உள்பட்ட 12 இடங்களில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.
வேலூரில் திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 27ஆம் தேதி நடக்கிறது.
சென்னை தெற்கு, வடக்கு, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுச்சேரி, மதுரை நெல்லை, கோவை, ஈரோடு,சேலம் ஆகிய நகரங்களில் உள்ளம் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
எந்த தலைப்பில் போட்டிகள் நடைபெறும் என்று கீழுள்ள நோட்டிபிகேஷன் பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை அருகில் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளிலோ அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்ரீராம் சீட்ஸ், எண் 9/41, ஆரணி சாலை, வேலூர் – 632 001, தொலைபேசி எண்: 0416 – 2216531, 4200 180 என்ற முகவரிக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.