நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் சாா்பில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ளோா் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 45 நாட்கள்.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி பயில பயிற்சிக்கான மொத்த செலவும் விடுதி செலவு உட்பட முழுமையாக தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடிப்போருக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். நாகை மாவட்டத்தை சோந்த தகுதி வாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் தாட்கோ இணைய தளமான இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்திலும், 04365-250305 என்ற தொலைபேசியிலும் மற்றும் 9445029466 என்ற கைப்பேசியிலும் தொடா்பு கொள்ளலாம்.