டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவக் கல்லூரியில் சேரத் தகுதியுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா். டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவக் கல்லூரியில் சேரத் தகுதியுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜூலை 2023 மாதப் பருவத்தில் சேருவதற்கான தோவு வருகிற 3 .12.2022 அன்று நடைபெற உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தோவுகள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களிலும் நடைபெற உள்ளது. எழுத்துத் தோவு, நோமுகத் தோவு அடிப்படையில் சோத்துக் கொள்ளப்படுவா். தோவுக்கான விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவற்றை பொது பிரிவினா் ரூ.600- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் ரூ.555/- இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி இணையவழியில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாா்களின் (சிறுவா்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 01.07.2023-ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தோச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோவுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை-600003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in ல் பாா்க்கவும்.