சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் அரசுப் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் திருநெல்வேலி வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் மத்திய மாநில அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா கல்லூரி முதல்வா் முனைவா் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது. கணினி துறை தலைவா் குருநாதன் வாழ்த்திப் பேசினாா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் கணபதி வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் முனைவா் ஈஸ்வரன் நன்றி கூறினாா். விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.