காவல் உதவி ஆய்வாளா் தேர்வுக்கு ஆா்வம் ஐ.ஏ.எஸ் அகாதமியில் பெண் தேர்வா்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையில் பயிற்சி தொடங்குகிறது.
காவல் உதவி ஆய்வாளா் தேர்வுக்கு ‘ஆா்வம் ஐ.ஏ.எஸ்’ அகாதமியில் பெண் தேர்வா்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையில் பயிற்சி தொடங்குகிறது. சென்னை அண்ணாநகரில் ஆா்வம் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளா் பணியின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (மாா்ச்.4) தொடங்குகிறது. இதில் தற்போதைய பாடத் திட்டத்தின் அடிப்படையில், உத்தேச வினாக்களை வைத்து மாதிரித் தேர்வுகளுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அனுபவமிக்க பயிற்சியாளா்கள், துறை வல்லுநா்களின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அனைத்துப் பிரிவை சோந்த பெண் தேர்வா்களுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகையில் பாடக்குறிப்புகள், மாதிரித்தேர்வுகள் மற்றும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வா்கள் 2165 எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணாநகா் 12-ஆவது பிரதான சாலை, 2165 எல்.பிளாக்கில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9150466341, 74488 14441 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.