TAMIL MIXER
EDUCATION.ன்
கள்ளக்குறிச்சி
செய்திகள்
விளையாட்டு மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற அழைப்பு
கள்ளக்குறிச்சி
மாவட்டத்தை
சேர்ந்த
பள்ளி
மாணவ
மாணவியர்,
தமிழகத்தில்
உள்ள
விளையாட்டு
மையங்களில்
தங்கி
பயற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர் விளையாட்டுத்
துறையில்
சாதனை
புரிய
வேண்டும்
என்பதற்காக,
தமிழ்நாடு
விளையாட்டு
மேம்பாட்டு
ஆணையம்
சார்பில்,
சத்தான
உணவுடன்
கூடிய
விளையாட்டு
விடுதிகள்
அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, திருநெல்வேலி,
கிருஷ்ணகிரி,
கோயம்புத்துார்,
கடலுார்,
தஞ்சாவூர்,
அரியலுார்,
துாத்துக்குடி,
சிவகங்கை,
தேனி,
ராமநாதபுரம்,
உதகமண்டலம்,
விழுப்புரம்,
சென்னை,
நெய்வேலி
மற்றும்
நாமக்கல்
ஆகிய
மாவட்டங்களில்
மாணவர்களுக்கான
விளையாட்டு
விடுதி
செயல்படுகிறது.
ஈரோடு, திருவண்ணாமலை,
நாமக்கல்,
திண்டுக்கல்,
நாகர்கோவில்,
பெரம்பலுார்,
தேனி,
புதுக்கோட்டை,
தருமபுரி
மற்றும்
சென்னை
ஆகிய
மாவட்டங்களில்
மாணவியர்
விளையாட்டு
விடுதி
செயல்படுகின்றன.
அதேபோன்று, சென்னை நேரு விளையாட்டரங்கம்,
திருச்சி
ஸ்ரீரங்கம்
மற்றும்
திருநெல்வேலி
ஆகிய
இடங்களில்
மாணவர்களுககும்,
சென்னை
நேரு
உள்
விளையாட்டரங்கம்
மற்றும்
ஈரோடு
ஆகிய
இடங்களில்
மாணவியருக்கான
முதன்மை
நிலை
விளையாட்டு
மைய
விடுதி
செயல்படுகிறது.
விளையாட்டு விடுதிகளில், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையும் மற்றும் +1 வகுப்பு சேர்க்கையும்,
முதன்மை
நிலை
விளையாட்டு
மையங்களில்
ஆறாம்
வகுப்பு
முதல்
எட்டாம்
வகுப்பு
வரை
சேர்க்கப்படுகின்றனர்.
விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை மையங்களில் சேர்க்கைகாக, மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24ம் தேதி கள்ளக்குறிச்சி
ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
விளையாட்டரங்கில்
நடக்கிறது.
தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை,
கிரிக்கெட்,
கால்பந்து,
வாள்
சண்டை,
ஜிம்னாஸ்டிக்,
கைப்பந்து,
வளைகோல்பந்து,
நீச்சல்,
டேக்வாண்டோ,
கையுந்துபந்து,
கபடி,
மேசைப்பந்து,
டென்னிஸ்,
ஜுடோ,
ஸ்குவாஷ்,
வில்வித்தை,
பளுதுாக்குதல்
போன்ற
விளையாட்டு
தேர்வுப்
போட்டிகள்
நடக்கிறது.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்
போட்டிகளில்
வெற்றி
பெற்ற
மாணவ
மாணவியருக்கு
முன்னுரிமை
வழங்கப்படுகிறது.
விளையாட்டில்
சிறந்து
விளங்கும்
மற்றும்
ஆர்வமுள்ள
மாணவ
மாணவியர்,
விளையாட்டு
விடுதி
மற்றும்
முதன்மை
விளையாட்டு
மையங்களின்
சேர்க்கைக்கான
விண்ணப்ப
படிவத்தை
www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ஆன்லைன் வாயிலாக பூர்த்தி செய்து 23ம்தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
தகவல்களுக்கு
ஆடுகள
தகவல்
தொடர்பு
மையத்தை
95140 00777
என்ற
மொபைல்
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.
எனவே, கள்ளக்குறிச்சி
மாவட்ட
பள்ளிகளில்
பயிலும்
மாணவ
மாணவியர்
இந்த
வாய்ப்பை
பயன்படுத்தி
விளையாட்டு
விடுதி
மற்றும்
முதன்மை
நிலை
விளையாட்டு
மையங்களில்
சேர்ந்து
பயன்பெறலாம்.