ரேஷன் கார்டு மூலமாகத்தான் அரசின் பல்வேறு சலுகைகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. புதியதாக திருமணம் ஆனவர்கள் கணவரின் பெயர் அல்லது மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது மிக அவசியம்.
அதே போல் குடும்பத்தில் புதியதாக உறுப்பினர் சேர்ந்தாலோ அவர்களின் பெயரையும் கட்டாயம் கார்டில் சேர்க்க வேண்டும்.
புதியதாக திருமணம் ஆனவர்கள் ஒருவேளை தனி வீட்டில் இருந்தால், அவர்கள் ஏற்கெனவே தனது குடும்பத்துடன் ரேஷன் கார்டில் இருக்கும் பெயரை நீக்கம் செய்து விட்டு தான் புதிய கார்டில் பெயரை சேர்க்க முடியும். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சலுகைகளை பெற ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும்.
அந்த தகவல்கள் தவறாக இருப்பின் அதனை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்து கொள்ளவும் முடியும். அதுமட்டுமல்லாமல், புதிய உறுப்பினர் பெயர்களையும் ஆன்லைன் மூலமாகவே சேர்த்து கொள்ள முடியும்.
முதலில் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ https://tnpds.gov.in/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
இந்த லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளும் இடம் பெற்று இருக்கும். அதனை தேர்வு செய்ய செய்து குடும்பத்தில் புதிய நபர்களை பற்றிய முழுமையான தகவலை கொடுக்க வேண்டும்.
அதன்பின், அதில் கேட்கப்பட்டிருக்கும் முக்கிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
அப்போது உங்களுக்கு பதிவு எண் ஒன்று கிடைக்கும். அதனை பயன்படுத்தி போரட்டலில் படிவத்தை கண்காணிக்கலாம். இறுதியாக ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு கடைசியாக ஒப்புதல் வழங்கப்பட்டு பெயர் இணைக்கப்படும்.
அதே போல் முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது.
ஆனால் தற்போது ஆதார் கார்டும் தேவை. குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.