தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) வாயிலாக, 2022- 23ம் நிதியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில், 1.55 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டங்களின் கீழ், கடனுதவிபெற விண்ணப்பிக்கலாம்.திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ‘டாம்கோ’ சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது.வரும் மார்ச் 6ம் தேதி, திருப்பூர் வடக்கு தாலுகாவில், திருப்பூர் நகர கூட்டுறவு வங்கி: திருப்பூர் தெற்கு தாலுகாவில், பொங்கலுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்; அவிநாசியில், ராக்கியபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் முகாம் நடைபெறுகிறது.மார்ச் 7 ம் தேதி, ஊத்துக்குளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம், கரடிவாவி கூட்டுறவு கடன் சங்கம்; காங்கயம், எஜமானுார்புதுார் கூட்டுறவு சங்கம்; வரும் மார்ச் 8ம் தேதி, உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம், காரத்தொழுவு கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடக்கிறது.காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடைபெறும்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் புத்தர் பார்சி மற்றும் ஜெயின் சிறுபான்மையினர் முகாமில் பங்கேற்று கடன் பெற விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை, 0421 2999130 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.