Join Whatsapp Group

Join Telegram Group

மதுரை – திருமங்கலம் இரட்டை பாதை பணி எந்தெந்த விரைவு ரயில்கள் ரத்து? தெரிந்து கொள்ளுங்கள்!

மதுரை - திருமங்கலம் இரட்டை பாதை பணி எந்தெந்த விரைவு ரயில்கள் ரத்து? தெரிந்து கொள்ளுங்கள்!

இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கவுள்ளதால், விரைவு ரயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • மதுரை – திருப்பரங்குன்றம் – திருமங்கலம் இடையே, இரட்டை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், பல விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை எழும்பூர் – மதுரை இரவு 10:05 மணி ரயில், வரும் 17, 19, 24, 26ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
  • சென்ட்ரல் – மதுரை இரவு 10:30 மணி ரயில், வரும் 22, 24, 27ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மதுரை – சென்ட்ரல் இரவு 10:50 மணி ரயில், 23, 26, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
  • புதுச்சேரி – கன்னியாகுமரி பகல் 12:00 மணி ரயில், 26ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி – புதுச்சேரி மதியம் 2:00 மணி ரயில், 27ம் தேதி ரத்து செய்யப்படுகிறது
  • தாம்பரம் – நாகர்கோவில் இரவு 7:30 மணி விரைவு ரயில், 27ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் – தாம்பரம் மாலை 4:15 மணி ரயில், 28ம் தேதி ரத்து செய்யப்படுகிறது
  • மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களின் சேவை, வரும் 28ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகின்றன
  • திண்டுக்கல் – மதுரை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள், இன்று முதல் 28ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகின்றன
  • தேனி – மதுரை முன்பதிவு இல்லாத ரயில்கள், 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன
  • மதுரை – எழும்பூர் இரவு 8:50 மணி ரயில், வரும் 16, 18, 23, 25ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
  • எழும்பூர் – காரைக்குடி மாலை 3:45 மணி ரயில், வரும் 16, 17, 20, 21, 23, 24, 27, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. காரைக்குடி – எழும்பூர் அதிகாலை 5:35 மணி பல்லவன் ரயில், வரும் 17, 18, 21, 22, 24, 25, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
  • மதுரை – தேனி; செங்கோட்டை – மதுரை; செங்கோட்டை – மதுரை; செங்கோட்டை – திருநெல்வேலி; திருநெல்வேலி – செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில்கள், வரும் 16ம் தேதி முதல் 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.
ஒரு பகுதி ரத்து

  • எழும்பூர் – மதுரை காலை 6:00 மணி தேஜஸ் ரயில், வரும் 10 முதல் 28ம் தேதி வரையில், 23ம் தேதி தவிர, மற்ற நாட்களில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • மதுரை – எழும்பூர் மாலை 3:00 மணி தேஜஸ் ரயில், வரும் 10 முதல் 28ம் தேதி வரையில், 23ம் தேதி தவிர, மற்ற நாட்களில் திருச்சியில் இருந்து மாலை 5:05 மணிக்கு புறப்படும்
  • எழும்பூர் – மதுரை மதியம் 1:50 மணி வைகை ரயில், வரும் 16 முதல் 28ம் தேதி வரையில், 20ம் தேதி தவிர, மற்ற நாட்களில் கூடல்நகர் வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை – எழும்பூர் இரவு 9:35 மணி பாண்டியன் ரயில், வரும் 16 முதல் 28ம் தேதி வரையில் கூடல்நகர் வரை மட்டுமே இயக்கப்படும்
  • மதுரை – எழும்பூர் காலை 7:10 மணி ரயில், வரும் 17 முதல் 28ம் தேதி வரையில் கூடல்நகரில் இருந்து, காலை 7:15 மணிக்கு புறப்படும்
  • எழும்பூர் – செங்கோட்டை இரவு 8:25 மணி ரயில், வரும் 24, 25ம் தேதிகளில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். செங்கோட்டை – எழும்பூர் மாலை 4:50 மணி ரயில், வரும் 25, 26ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து, இரவு 9:32 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment