தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ள, ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவுகள் திங்கள்கிழமை (ஜூலை-31) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசுத் தேர்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தொகுதி 1, 2 மற்றும் 4-இல் அடங்கிய பணிகளுக்கான, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவா்களுக்காக, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில்,ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதற்கான முன்பதிவுகள் திங்கள்கிழமை (ஜூலை-31) தொடங்குகிறது. போட்டித் தேர்வு எழுதவுள்ளவா்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டு தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் சோபவா்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மாதிரித் தேர்வு, வினாடி வினா, குழு விவாதங்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.