TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு பேருந்துகளில்
நவீன
வசதி
– நாளை
முதல்
தொடக்கம்
தமிழக அரசு சென்னை (எம்டிசி), விரைவுப் போக்குவரத்துக்
கழகம்,
விழுப்புரம்,
சேலம்,
கோவை,
கும்பகோணம்,
மதுரை,
திருநெல்வேலி
ஆகிய
இடங்களில்
கோட்டங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதன்
மூலம்
20 ஆயிரம்
பேருந்துகள்
இயங்கி
வருகின்றனர்.
பேருந்துகளில்
பயணம்
செய்யும்
மக்களின்
வசதிக்காக
பல்வேறு
அம்சங்களும்,
சலுகைகளும்
வழங்கப்பட்டு
வருகின்றன.
அந்த
வகையில்
தற்போது
சென்னை
மாநகர
பேருந்துகளில்
புவிசார்
நவீன
தானியங்கி
அறிவிப்பான்
(GPS) மூலம்
பேருந்து
நிறுத்தம்
ஒலி
அறிவிப்பு
திட்டம்
நாளை
(நவ.
26) தொடங்கப்பட
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளில்
அடுத்து
வர
இருக்கும்
நிறுத்தம்
குறித்து
தமிழ்,
ஆங்கில
மொழிகளில்
ஒலி
பெருக்கி
மூலம்
அறிவிக்கப்படும்.
அது
மட்டுமில்லாமல்
300 மீட்டருக்கு
முன்னதாகவே
பேருந்து
நிறுத்தத்தின்
பெயர்
குறித்த
தகவல்
பேருந்தில்
ஒலிபெருக்கி
மூலம்
தெரிவிக்கப்படுவதால்
பயணிகள்
தங்களுடைய
நிறுத்தத்தை
சரியாக
கண்டறிந்து
இறங்கலாம்.
மேலும் இந்த வசதி மூலம் பார்வையற்றவர்களுக்கும்,
எழுத
படிக்க
தெரியாதவர்களுக்கும்,
சென்னைக்கு
புதிதாக
வருபவர்களுக்கும்
வசதியாக
இருக்கும்.