புதிய ஜீவன் அமர் மற்றும் டெக்டெர்ம் போன்ற 2 புது டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்களை LIC எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புது ஜீவன் அமர், டெக்டெர்ம் ஆகிய இரண்டும் நான்-லிங்க்ட் மற்றும் நான்-பார்ட்டிசிபேட்டிங் திட்டங்கள் ஆகும். இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் நிலையான ப்ரீமியங்களை செலுத்துவதன் வாயிலாக சிறந்த வருமானத்தை பெற இயலும் என கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நான்-லிங்க்ட் திட்டம் எனில் ஆபத்தில்லாத மற்றும் பங்குசந்தை உடன் இணைக்கப்படாத உத்திரவாதமான வருமானத்தை தரக்கூடிய திட்டம் ஆகும்.
இதில் ஜீவன் அமர் திட்டம் பாலிசிதாரர்களுக்கு லெவல் சம் அஷ்யூர்ட் மற்றும் இன்க்ரீஸிங் சம் அஷ்யூர்ட் ஆகிய 2 வகையான ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பாலிசிதாரர்கள் ஒற்றை பிரீமியம் (அ) வழக்கமான பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம். இதுதவிர்த்து வரம்புடன் கூடிய கட்டண ஆப்ஷன்களும் இத்திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின் புது ஜீவன் அமர் திட்டம் பெண்களுக்கு பலவித பிரீமியம் ஆப்ஷன்களை அளிக்கிறது. அவற்றில் ஒற்றை பிரீமியம் ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ரூபாய்.30,000 செலுத்த வேண்டும்.
அதேபோல் வழக்கமான பிரீமியம் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் ரூபாய்.3000 செலுத்தவேண்டும். புகைபிடிப்பவர்கள் மற்றும் புகைபிடிக்காதவர்களுக்கு என்று பிரீமியம் திட்டங்களும் வழங்கப்படுகிறது. இதில் புகைப்பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் படி வசதிகள் வழங்கப்படுகிறது. 18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதன் மொத்த பாலிசி காலமானது 10 -40 வருடங்கள் ஆகும். இத்திட்டத்தில் அடிப்படை காப்பீட்டு தொகை ரூபாய்.25,00,000 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் கூடுதலாக பிரீமியம் செலுத்துவதன் வாயிலாக விபத்து காப்பீட்டுக்கான நன்மையை பெறலாம்.