TAMIL MIXER
EDUCATION.ன்
திருவண்ணாமலை
செய்திகள்
இ–சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
– திருவண்ணாமலை
திருவண்ணாமலை
மாவட்ட
கலெக்டர்
முருகேஷ்
வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை
மாவட்டத்தில்
வருவாய்
கிராமங்கள்
தோறும்
தனியார்
இ–சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின்
வாழ்வாதாரத்தை
உயர்த்தும்
வகையில்
தனியார்
இ–சேவை மையம் அமைக்க உரிமம் வழங்குகிறது.
எனவே மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணையதங்களில்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள்
பிளஸ்
2 வகுப்பில்
தேர்ச்சியும்,
கணினி
பயன்படுத்தவும்,
தமிழ்
மற்றும்
ஆங்கிலம்
மொழி
படிக்க
தெரிந்திருக்க
வேண்டும்.
100
சதுர
மீட்டர்
பரப்பளவு
கொண்ட
இ–சேவை மைய கட்டிடத்தில்
கணினி,
பிரிண்டர்,
ஸ்கேனர்
மற்றும்
பயோமெட்ரிக்
கருவிகள்
உபகரணங்கள்
கட்டாயம்
இருக்க
வேண்டும்.
குறைந்த பட்சம் 2 எம்.பி.பி.எஸ். (MBPS) இ–சேவை மையம் அமையும் இடத்தில் அதிவேக அலைவரிசையுடன்
தொடர்ச்சியான
தடையற்ற
இண்டர்நெட்
இணைப்பு
இருக்க
வேண்டும்.
தமிழ்நாடு
மின்
ஆளுமை
முகமையால்
ஏற்றுக்
கொள்ளப்பட்ட
இடத்தில்
இ–சேவை மையம் அமையப்பெற வேண்டும்.
விண்ணப்பங்கள்
அடிப்படையில்
தேர்வு
செய்யப்படும்
மாற்றுத்
திறனாளி
ஆப்ரேட்டர்களுக்கு
ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு
இ–சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.
மாவட்டத்தில்
படித்த
கணினி
பயிற்சி
பெற்றுள்ள
மாற்றுத்
திறனாளிகள்
இ–
சேவை
மையம்
அமைத்து
தங்களது
வாழ்வாதாரத்தை
மேம்படுத்திக்
கொண்டு
பயன்பெறலாம்.