மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மலர்விழி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த, சொந்த வீடு இல்லாத தொழிலாளர்கள், சொந்தமாக வீடு வைத்திருப்போர் வீடு கட்டிக்கொள்ள அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது.மதுரை மாவட்ட தொழிலாளர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையவழியில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், நலவாரியத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகள்தொடர் புதுப்பித்தல் வைத்திருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் நாளிலும் பதிவு நடப்பில் இருக்க வேண்டும். தொழிலாளரின் குடும்பத்தினருக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது.வேறு வீட்டுவசதிதிட்டத்தில் பயனடைந்திருக்க கூடாது. ஆண்டுவருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.