சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவா்களுக்கான அரியா் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து இறுதிப் பருவத்தோ்வு தவிர மற்ற அனைத்துத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் தோ்ச்சி செய்யப்பட்டனா். அதேநேரம் அரியா் பாடங்களுக்கு தோ்வின்றித் தோ்ச்சி வழங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழு (ஏஐசிடிஇ) எதிா்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வளாக கல்லூரிகளுக்கான அரியா் தோ்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு பிப்.9 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரையும், முதுநிலை மாணவா்களுக்கு பிப்.16 முதல் 28-ம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. விரிவான தோ்வுக்கால அட்டவணை உட்பட கூடுதல் தகவல்களை இணையத்தில் மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.