Thursday, December 19, 2024
HomeBlogஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
- Advertisment -

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இந்திய அரசின் பாஸ்போர்ட் சேவா போர்டல் (Passport Seva Portal) பக்கத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யலாம். சர்வதேச பயணத்திற்கு தேவையான உரிய சான்றிதழ்களும் இதில் வழங்கப்படுகிறது

கல்வி, சுற்றுலா, தொழில் நோக்கமாக, மருத்துவம் பார்க்க என எந்த காரணத்திற்காக வெளிநாடுகள் சென்றாலும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ சர்வதேச பயண ஆவணம் வைத்திருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாஸ்போர்ட் வாங்குவது தொடர்பான வேலைகளை ஆன்லைனில் செய்யும் படி வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிகரித்த தேவையை பூர்த்தி செய்வதற்காக, வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) மே 2010 இல் பாஸ்போர்ட் சேவா திட்டத்தை (PSP) அறிமுகப்படுத்தியது. பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் இதர சேவைகளை எளிதாக்கியது. காவல்துறை ஒப்புதல் மற்றும் இதர சான்றிதழ்களும் ஆன்லைனில் பெறப்படும் வகையில் எளிதாக்கியது. அலுவலகம் சென்று பெறுவது மற்றும் பணிச்சுமையை குறைக்கும் வகையில் அனைத்தும் ஆன்லைன் செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

Step 1: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் passportindia.gov.in. என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: அங்கு “Register Now” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.

Step 3: பதிவு செய்யப்பட்ட பின், பதிவு செய்யப்பட்ட லாக்கின் ஐடியை பயன்படுத்தி பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்

Step 4: இப்போது ‘அப்ளை’ என்ற பட்டனை கொடுத்து புது பாஸ்போர்ட் அப்ளை செய்வதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Step 5: படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அதாவது (submit) கொடுக்க வேண்டும்

Step 6: அடுத்து, நீங்கள் சேவ் செய்த அல்லது சமர்ப்பித்த படிவத்தை (View Saved/Submitted Applications) மீண்டும் ஓபன் செய்ய வேண்டும்.

Step 7: இப்போது “Pay and Schedule Appointment” லிங்கை கிளிக் செய்து சேவை கட்டணத்தை செலுத்தவும்.

குறிப்பு: PSK/POPSK/PO என எதில் விண்ணப்பித்தாலும் ஆன்லைன் கட்டணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழக்கமான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500. தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000 ஆகும்.

Step 8: நெட் பேங்கிங் அல்லது வேறு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம். “Print Application Receipt” எனக் கொடுத்து ரசீதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Step 9: அனைத்தும் process முடிந்த பிறகு, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் (SMS) வரும்.

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆவணங்கள் காண்பிக்க இது கட்டாயம் தேவைப்படும்.

Step 10: விண்ணப்பத்தின் போது நீங்கள் சமர்ப்பித்த விவரங்களின் அனைத்து அசல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் சேவா கேந்திரா (பிஎஸ்கே)/மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (ஆர்பிஓ) (Passport Seva Kendra (PSK)/Regional Passport Office (RPO) ) அவர்கள் தெரிவித்த தேதியில் சென்று காண்பிக்க வேண்டும்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -