இந்திய
கணினி சங்கம், கோவை
சேப்டர் சார்பில் ஆன்லைன்
இன்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கான இலவச ஆலோசனை,
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வரும்
19ம்
தேதி காலை 10.30 மணிக்கு
ஆன்லைனில் நடைபெற உள்ளது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கில் சேரவுள்ள
மாணவ, மாணவிகளுக்கான இலவச
வழிகாட்டுதல் நிகழ்வை
கடந்த 17 ஆண்டுகளாக சி.எஸ்.ஐ
எனப்படும் இந்திய கணினி
சங்கம், கோவை சேப்டர்நடத்தி வருகிறது.
இந்த
ஆண்டுக்கான வழிகாட்டுதல் நிகழ்வில்
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு செயலாளர் புருசோத்தமன், தமிழ்நாடுபொறியியல் கலந்தாய்வுமுன்னாள் செயலாளரும், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் டீனுமான நாராயண சாமிஆகியோர் கலந்து கொண்டு, இன்ஜினீயரிங் கவுன்சிலிங்
தொடர்பான ஆலோசனை களையும்,
வழிகாட்டுதல்களையும் வழங்க
உள்ளனர்.
ஆன்லைன்
சேர்க்கை தொடர்பான மாணவ,
மாணவிகளின் அனைத்து சந்தேகங்களையும் வழிகாட்டுதல் நிகழ்வில்
கேட்டு,தெளிவு பெறலாம்.
கலந்தாய்வு நிகழ்வு பற்றி மேலும்
விவரங்களுக்கு 9489831307 மற்றும்
0422 4384464 என்ற தொலைபேசியிலோ அல்லது
office@csi-cbe.org என்ற
மின்னஞ்சலிலோஅல்லது www.csi-cbe.org என்றவலைதளத்தின் மூலமாகவோதொடர்பு கொள்ளலாம்.