யுபிஎஸ்சி
தேர்வுக்கு இலவச பயிற்சி–மதுரை
காமராஜர் பல்கலைக்கழகம்
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக ஐபிஎஸ், ஐஏஎஸ்
அதிகாரிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி அடையும் தமிழக
மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து
கொண்டே வருவதால் மதுரை
காமராஜ் பல்கலைக்கழகம் சார்பாக
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎஸ்,
ஐஏஎஸ் இலவச பயிற்சி
வகுப்பிற்கு மாணவர்களை தேர்வு
செய்வதற்கான நுழைவுத்தேர்வு, ஜனவரி
31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பல்கலை வளாகத்தில் நடைபெற
உள்ளது.
சிவில்
சர்விஸ் தேர்வுகள் மூலம்
குடிமைப்பணி அதிகாரிகளாகும் மாணவர்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை
கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதன்படி
கடந்த ஆண்டு 15 சதவிகிதம்
பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் இது இந்த
ஆண்டு 9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை
சரிசெய்ய தமிழகத்தில் உள்ள
பல்கலைக்கழகங்கள் சில
பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களுக்கான நுழைவுத்தேர்வு வருகிற ஜனவரி 31-ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுத விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவத்தை, மதுரை காமராஜர் பல்கலையின் www.mkuniversity.co.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் 100 நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்குபெறும் தேர்வர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவை அரசு சார்பில் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.