திருத்தணி-ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், தையல் பயிற்சி முடித்த எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர், இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் தேவி கூறியதாவது:ஆதிதிராவிடர் நலத்துறை திட்டம் வாயிலாக, திருத்தணி வருவாய் கோட்டத்தில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவு பெண்கள் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.ஆகையால், முறையாக தையல் பயிற்சி பெற்று சான்றிதழ் உள்ளவர்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் என்னிடம் வழங்கலாம்.
ஆதிதிராவிடர் பிரிவு பெண்கள், தையல் பயிற்சி சான்றிதழ், ஜாதி சான்று, வருவாய் சான்று மற்றும் ஆதார் கார்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.பழங்குடியினர் பிரிவு பெண்கள் தையல் பயிற்சி சான்றிதழ், ஜாதி சான்று மற்றும் ஆதார் கார்டுடன் விண்ணப்பிக்கலாம்.ஜூன் மாதம், இரண்டாவது வாரத்திற்குள் தகுதியான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த அறிய வாய்ப்பினை தையல் பயிற்சி முடித்த பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.