TAMIL MIXER
EDUCATION.ன்
கடனுதவி செய்திகள்
தொழில்முனைவோருக்கு
மானியத்துடன்
கடனுதவி
பெரம்பலூா் மாவட்டத்தைச்
சேர்ந்த
எஸ்.சி., எஸ்.டி தொழில் முனைவோர்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ், மானியத்துடன்
கடனுதவி
பெற
ஆட்சியா்
க.கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு எஸ்.சி, எஸ்.டி பிரிவு தொழில் முனைவோருக்கென
பிரத்யேக
சிறப்புத்
திட்டமாக,
அண்ணல்
அம்பேத்கா்
வெல்லும்
தொழில்
முனைவோர்
பிசினஸ்
சாம்பியன்ஸ்
திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ்,
ஆா்வமுள்ள
புதிய
தொழில்
முனைவோர்
முன்மொழியும்
நேரடி
வேளாண்மை
தவிர்த்த
உற்பத்தி,
வணிகம்
மற்றும்
சேவை
சார்ந்த
தொழில்
திட்டத்துக்கு
கடனுதவியுடன்
மானியம்
வழங்கப்படும்.
மொத்த
திட்டத்
தொகையில்
65 சதவீதம்
வங்கிக்
கடனாக
ஏற்பாடு
செய்யப்பட்டு,
35 சதவீத
அரசின்
பங்காக
மானியம்
வழங்கப்படும்.
பயனாளா்கள் எவ்வித நிதியும் செலுத்த வேண்டியதில்லை.
தொழில்
முனைவோர்
மேம்பாட்டு
பயிற்சி
மற்றும்
குறிப்பிட்ட
திட்டம்
தொடா்பான
சிறப்புப்
பயிற்சி
அல்லது
திறன்
மேம்பாட்டு
பயிற்சி,
தொழில்
முனைவோர்
மேம்பாடு
மற்றும்
புத்தாக்க
நிறுவனம்
மூலமாக
இலவசமாக
வழங்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு,
பொது
மேலாளா்,
மாவட்ட
தொழில்
மையம்,
பெரம்பலூா்
என்னும்
முகவரியில்
நேரடியாகவோ
அல்லது
89255 33976
என்ற
எண்ணிலோ
தொடா்பு
கொள்ளலாம்.
இத்திட்டம் தொடா்பான விழிப்புணா்வுக்
கூட்டம்
ஆட்சியா்
தலைமையில்
மே
30ம்
தேதி
மாலை
5 மணியளவில்
ஆட்சியரக
கூட்ட
அரங்கில்
நடைபெற
உள்ளது.
ஆா்வமுள்ள
எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர்
இக்கூட்டத்தில்
பங்கேற்று
பயன்பெறலாம்.