👉இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
👉விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் படித்தார்.
👉1960-ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சியை தொடங்கிய அப்துல் கலாமின் பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான இஸ்ரோ வரை தொடர்ந்தது.
👉ரோகிணி 1 ஏவுகணை, பொக்ரான் சோதனை போன்றவற்றை முன்னின்று நடத்தி நாட்டிற்கு பெருமை சேர்ந்தார்.
👉2002-ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட அப்துல் கலாம் மக்களின் கொண்டாட்டத்துக்குரிய குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.
👉அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களில் அக்னிச் சிறகுகள், எனது பயணம், இந்தியா 2020 ஆகியவை மிகவும் பிரபலமாகும்.
👉பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா என உயரிய விருதுகளைப் பெற்றவர்.
👉 2010 ம் ஆண்டு ஐ.நா.சபை அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 “உலக மாணவர் தினம்” என்று அறிவித்தது .
👉தமிழக அரசின் சார்பில் இந்நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.