ரேஷன் அட்டை என்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணமாகவும் இருப்பிட சான்றாகவும் பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டு இருப்பதால் நியாய விலை கடைகள் மூலமாக மலிவு விலையில் பொருட்களையும், அரசின் நலத்திட்டங்களையும் மக்கள் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணிக்கை ஏற்ப இலவசமாக கோதுமை மற்றும் பிற உறவு தானியங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பயனுடைய ரேஷன் கார்டை பெறுவதற்கு தற்பொழுது ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். மேலும் புதிய உறுப்பினர் பெயரையும் சேர்க்கலாம். அதற்கு முதலில் இணையதளத்தில் இருந்து படிவம்-3 ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அதனை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பின் அதன் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்படும்.