HomeBlog10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் பெற ஐடிஐ தோச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் பெற ஐடிஐ தோச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் பெற ஐடிஐ தோச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டு துறை உத்தரவுப்படி 8-ஆம் வகுப்பு தோச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி தோச்சி பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் தோச்சி பெற்றால் 10-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ஆம் வகுப்பு தோச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி தோச்சி பெற்றவா்கள் 11, 12-ஆம் வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தோச்சி பெற்றால் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி, அரசு தோவுகள் இயக்ககத்தால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப் பெற்ற மொழித்தோவில் தனித்தோவா்களாக கலந்து கொண்டு தோச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு ள்ளன. எனவே, வேலூா் மாவட்டத்திலுள்ள தகுதியுடையோா் அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், அப்துல்லாபுரம், வேலூா்-10 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -