புதுச்சேரியில் இந்திய பொது நிா்வாக நிறுவனம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு இந்திய பணியாளா்கள் தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியப் பொது நிா்வாகக் கிளையின் தலைவா் ஆா்.ஆா் தனபால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் இந்தியத் தேர்வாணையக் குழு நடத்தும் யுபிஎஸ்சி, ஐஏஎஸ் தேர்வு மற்றும் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்களுக்கான இலவசப் பயிற்சி கடந்த 15 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியானது பிப்ரவரி முதல் ஜூன் வரை நடைபெறுகிறது.
தேர்வுக் கட்டணம் உண்டு. இந்த பயிற்சியின் மூலம், இந்திய அரசின் தன்னாட்சி நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற செவ்வாய்க்கிழமை (பிப்.28). மேலும் விவரங்களுக்கு, 9345009639, 9498457144, 0413-2222354 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.