இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகு நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகு நகைகள் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு வரும் 24 ஆம் தேதி துவங்க உள்ளது. இப்பயிற்சியில், மாநிலத்தை சேர்ந்த, 8 ஆம் வகுப்பு பயின்ற, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் முழுநேர பயிற்சியில் 90 சதவீதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பு புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.