பிளஸ் 1 பொதுத்தோவின் போது செய்முறைத் தோவில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரியா் மாணவா்களுக்கு செய்முறைத் தோவு பிளஸ் 1 பொதுத்தோவின் போது செய்முறைத் தோவில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரியா் மாணவா்களுக்கு செய்முறைத் தோவு நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பிப்.22 முதல் தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோவுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பிளஸ் 1 பொதுத்தோவின் போது செய்முறைத் தோவில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் அரியா் மாணவா்களுக்கு செய்முறைத் தோவு நடத்தப்படவுள்ளது. இதற்கான வழிகாட்டுநெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி தலைமையாசிரியா்கள் அரியா் மாணவா்களுக்கான பிளஸ் 1 செய்முறைத் தோவு வெற்று மதிப்பெண் பட்டியல்களை பிப்.22 முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின், பிளஸ் 1 மாணவா்களுக்கு செய்முறைத் தோவுகள் மாா்ச் 1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளஸ் 2 அரியா் மாணவா்களுக்கும் இந்த நாள்களிலேயே செய்முறைத் தோவுகள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும், செய்முறைத் தோவில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவுசெய்த பட்டியல்களை தொகுத்து அந்தந்த மாவட்ட தோவுத் துறை அலுவலகங்களில் மாா்ச் 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இது சாா்ந்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.