TAMIL MIXER
EDUCATION.ன்
நீட்
செய்திகள்
நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு
இட
ஒதுக்கீடு
– புதுச்சேரி
கவர்னர்
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு
இட
ஒதுக்கீடு
செய்திட
கவர்னர்
தமிழிசை
உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டம்
உள்ளது.
இது
இந்தாண்டு
முதல்
9ம்
வகுப்பு
வரை
விரிவாக்கம்
செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கியுள்ள
நிலையில்,
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம்,
நீட்
தேர்வு
முடிவுகள்
குறித்து
ராஜ்
நிவாசில்
நேற்று
கவர்னர்
தமிழிசை
தலைமையில்
ஆலோசனைக்
கூட்டம்
நடந்தது.
கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கல்வித்துறைச்
செயலர்
ஜவஹர்,
கவர்னரின்
செயலர்
அபிஜித்
விஜய்
சவுத்ரி,
ஸ்மார்ட்
சிட்டி
இணை
தலைமை
நிர்வாக
அதிகாரி
ருத்ரகவுடு,
பள்ளிக்
கல்வித்துறை
இயக்குநர்
பிரியதர்ஷினி,
இணை
இயக்குநர்
சிவகாமி
மற்றும்
அதிகாரிகள்
கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துதல்,
ஆசிரியர்களுக்கு
பயிற்சி
அளித்தல்,
மாணவர்களுக்கு
பாடப்புத்தகங்கள்,
சீருடை
வழங்குதல்,
நீட்
பயிற்சி,
உள்கட்டமைப்பு
மேம்பாடு,
பொதுத்தேர்வு
தேர்ச்சி
சதவீதம்
அதிகரித்தல்
குறித்து
ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை
அறிமுகப்படுத்துவதில்
உள்ள
சவால்களை
சந்திக்கும்
வகையில்
ஆசியர்களுக்கு
புத்தாக்க
பயிற்சி
அளிக்க
வேண்டும்.
அனைத்து அரசு பள்ளிகளும் மேம்படுத்தி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். டிஜிட்டல், ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மதிய உணவு திட்டத்தில் வாரத்தில் 2 நாள் சிறுதானிய உணவு வழங்க வேண்டும்.
‘நீட்‘ தேர்வில் தற்போது 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனை
அதிகரிக்கவும்,
மதிப்பெண்
அதிகரித்திட
வல்லுனர்களை
கொண்டு
பயிற்சி
அளிக்க
வேண்டும்.
‘நீட்‘ தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு
குறிப்பிட்ட
சதவீதம்
இட
ஒதுக்கீடு
செய்ய
வேண்டும்.
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவு குறித்து ஆய்வு செய்து அதனை சரி செய்திட வேண்டும். பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு
ஊக்கத்தொகை
வழங்கி,
மாணவர்
தினம்
கொண்டாட
உத்தரவிட்டார்.
தமிழகம் மாநிலமாக உள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கான
7.5 சதவீத
இட
ஒதுக்கீட்டினை
நேரடியாக
சட்டம்
இயற்றி
சாதித்தது.
ஆனால்
யூனியன்
பிரதேசமான
புதுச்சேரிக்கு
அரசு
பள்ளி
மாண
வர்களுக்கு
தன்னிச்சையாக
இட
ஒதுக்கீட்டினை
அமல்படுத்த
அதிகாரம்
இல்லை.
சட்டம்
இயற்றி
மத்திய
அரசின்
ஒப்புதல்
பெற்றே
அமல்படுத்த
வேண்டும்.
ஆனால், தமிழகத்தை பின்பற்றி அப்போதைய காங்., அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
10 சதவீத
இட
ஒதுக்கீடு
வழங்க
அமைச்சரவையில்
முடிவு
செய்து
தீர்மானம்
இயற்றி
அனுப்பியது.
அதற்கு
மத்திய
அரசு
ஒப்புதல்
அளிக்கவில்லை.
அமலுக்கு வருமா?
அரசு பள்ளி மாணவர்களுக்கு
10 சதவித
இட
ஒதுக்கீடு
குறித்த
விவகாரத்தில்
சரியான
நடைமுறைகளை
அரசு
பின்பற்றாததால்
தோல்வியில்
முடிந்தது.
மேலும்,
கடந்த
ஆட்சியில்
மாநிலத்தில்
காங்.,
மத்தியில்
பா.ஜ.,அரசுகள் இருந்ததால், கொள்கையில் இணக்கம் இல்லாமல் இருந்தது.
தற்போது, மத்திய அரசுக்கு இணக்கமான அரசு புதுச்சேரியில்
உள்ளதால்,
அரசு
பள்ளி
மாணவர்களுக்கான
மருத்துவ
படிப்பில்
இடஒதுக்கீடு
பெற
வாய்ப்புள்ளது.
மேலும், தற்போது கவர்னரே ‘நீட்‘ தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு
இட
ஒதுக்கிடு
வழங்க
வேண்டும்
என
பச்சை
கொடி
காட்டியுள்ளதால்,
இனி
பிரச்னை
இருக்கப்
போவதில்லை.
எனவே மாநில அரசு, இப்போதே மத்திய அரசின் கதவை தட்டினால் தான், அடுத்த கல்வி ஆண்டிற்காவது
இடஒதுக்கீடு
பெற
முடியும்.