முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் அக்டோபர் ஆறாம் தேதி முதல் 2 கிலோ, 5 கிலோ கியாஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் கூட்டுறவு சொசைட்டி மூலம் கேஸ் சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரேஷன் கடையில் மூலம் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் பரிசோதனை முறையில் கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.