நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் 04367-260666 / 261444 ஆகிய ஏதாவது ஒரு எண்ணை தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.