தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகவுள்ளதால், சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.