மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை பட்டப்படிப்புக்கான, ‘க்யூட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள், வரும் 17ல் வெளியிடப்பட உள்ளன.நாட்டில் உள்ள 200 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, ‘க்யூட்’ எனப்படும் பொது பல்கலை நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் இந்த தேர்வை நடத்துகிறது.இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வை எழுத, 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இது, கடந்த ஆண்டை விட, 41 சதவீதம் அதிகம். நாட்டின் இரண்டாவது பெரிய நுழைவுத்தேர்வான இதன் முடிவுகள், வரும் 15ம் தேதி வெளியாவதாக இருந்தன.இந்நிலையில், ”தேர்வு முடிவுகள் 17ல் வெளியிடப்படும்,” என, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று தெரிவித்தார்.