மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.தற்போது அரசு பணியாளர் தேர்வு வாரியம் டி.என்.பி.எஸ்.சி., ஜி.ஆர்., 1,2,3 தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளுக்கு அறிக்கை வெளியாகவுள்ளது.
இத்தேர்விற்கும் கட்டணமில்லா வகுப்பு நடத்தப்பட உள்ளது.பயிற்சியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். தேவையான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வலுவலகத்தில் உள்ள நுாலகத்தில் தேர்வுக்குரிய புத்தகங்கள் உள்ளன.திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடக்கும் வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் ஒரு முறை பதிவு செய்து இருப்பின் அதன் நகலுடன் புதுாரில் உள்ள மையத்திற்கு நேரில் வரலாம். என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.