நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் விவசாயிகள் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு பெற்று தங்களது பண தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
(KISAN CREDIT CARD) E – Seva Website: Click Here
இந்த கார்டு மூலமாக விவசாயிகள் பெரும் கடன் தொகைக்கு மிகக் குறைவான வட்டி விகிதமே விதிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் வட்டி மானியமும் அரசால் வழங்கப்படுகின்றது.இந்த கிரெடிட் கார்டு பெற விரும்பும் விவசாயிகள் நேரடியாக வங்கிக் கிழக்குச் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இருந்தாலும் வங்கி கிளைக்கு செல்லாமல் கிசான் கிரெடிட் கார்டுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம் என இந்தியாவில் உள்ள இரண்டு வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பெடரல் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் முதல் கட்டமாக டிஜிட்டல் முறையில் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு பேப்பர் வேலைகள் எதுவுமே கிடையாது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் மட்டும்தான். ரிசர்வ் வங்கியில் முன்னெடுப்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பெடரல் வங்கி ஆகிய வங்கிகள் விவசாயிகள் ஆன்லைன் மூலமாக கிசான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. விவசாயிகளின் ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே சரிபார்க்கப்படும். எனவே விவசாயிகள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே எளிதில் வேலையை முடித்து விடலாம்.