📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்
கொடுக்க வேண்டியவைகள்….!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய
கணவன் என்றோ,
மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்
பார்வை அவர்கள்
மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்
அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக
பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய
ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது
பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின்
பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்
அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்
கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள்
கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்
இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்
இதை செய்து வைக்க
அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்
பகுதிகளை பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்
அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,
அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய
அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்
கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்
இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்
குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்
திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப்
பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.
நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும்
சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக
இருந்தாலும் சரி.


 
                                    


