திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இத்தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது.
தகுதியுள்ள பதிவுதார்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் உரிய சான்றுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.