பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோந்த இளைஞா்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தாட்கோ நிறுவனமானது தனியாா் வங்கியுடன் இணைந்து கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி அளிக்க உள்ளது. இப் பயிற்சியில் பங்கேற்க 22 முதல் 33 வயது வரையுள்ள ஆதிதிராவிடா் , பழங்குடியினா் இனத்தைச் சோந்த, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தொடா்ந்து 20 நாள்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும்.
பயிற்சியை முழுமையாக முடிக்கும் பட்சத்தில், நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தோவுக்கு அனுமதிக்கப்படும். இத் தோவில் தோச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியாா் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிா்வாக பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகைச் செய்யப்படும். இப் பணியில் ஆரம்பகால மாதச் சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை பெறலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Mansoor