TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
30 ஜோடிக்கு இலவச திருமணம் இந்துக்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம் மண்டல இந்து அறநிலையத்துறை
சார்பில்,
30 ஜோடிகளுக்கு
இலவச
திருமணம்
செய்யப்பட
உள்ளது.
அதில் சேலம், தர்மபுரி மாவட்டத்தில்
தலா,
15 ஜோடி
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.
ஜூன்,
3ம்
வாரம்
நடத்தப்படும்
திருமண
வைபவ
தேதி
பின்னர்,
அறிவிக்கப்படும்.
தகுதி
உடைய
இந்துக்கள்,
இலவச
திருமணத்துக்கு
விண்ணப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்பம், அருகே உள்ள கோவில், உதவி கமிஷனர், இணை கமிஷனர் என, ஏதாவது ஒரு அலுவலகத்தில்
இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம்.
அதை பூர்த்தி செய்து, ஆதார், வருவாய் சான்று உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
ஆண்டு வருவாய், 72 ஆயிரம் ரூபாய்க்குள்
இருக்க
வேண்டும்.
தேர்வு
செய்யப்படும்
ஜோடிகளுக்கு,
4 கிராம்
தாலி,
திருமண
ஆடை
உள்பட,
50 ஆயிரம்
ரூபாய்
மதிப்பில்
சீர்வரிசை
வழங்கி,
கோவிலில்
திருமணம்
நடத்தி
வைக்கப்படும்.
குறிப்பாக மணமகன், மணமகளுக்கு முதல் திருமணமாக இருப்பது கட்டாயம். உபயதாரர் நிதி இல்லாத பட்சத்தில் கோவில் நிதியில் திருமண வைபவம் நடத்தி வைக்கப்படும்.
இதுகுறித்து, சேலம் உதவி கமிஷனர் ராஜாவை, 94434 82078
என்ற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.