மருத்துவ காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நுவி வழிகாட்டு மையம் சார்பில் சனிக்கிழமை (செப்.24) இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் 889 வருந்த ஆளுநர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த diploma in pharmacy or bachelor of Pharma cy or Pharma.D கல்வி தகுதியுடைய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் பட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கூறியப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இந்தப் பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறா ஆகிய நாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை 24ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 9499055893 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.