“விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் மூலம்செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சந்தேகங்கள், புகார்களுக்கு பொதுமக்கள் 94439 64200என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட புதிய அலைபேசி எண் தொடர்பான அறிவிப்பு பலகை, துண்டு பிரசுரங்களை வெளியிட்டு அவர் பேசியதாவது:மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க ஏதுவாக 94439 64200 என்ற புதிய அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்புக் கொண்டோ அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவோ குறுஞ்செய்தி அனுப்பி பயன்பெறலாம், என்றார்.