போட்டி
தேர்வுகளுக்கு இலவச பயிற்சி–வேலைவாய்ப்பு துறை அழைப்பு
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் வாயிலாக
பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தற்போது
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வு வாரியத்தின் 2021 ஆம்
ஆண்டிற்கான ஆண்டு திட்ட
நிகழ்வின் படி வரும்
மே மாதம் குரூப்
2ஏ தேர்விற்கான அறிக்கை
வெளியிடப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து,
போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 6ம் தேதி முதல் வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பாட குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.