மதுரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக சார்பில் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பப் பிரிவுகளில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப்பயிற்சி வழங்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு நுட்பனர், சிகிச்சைப் பிரிவு உதவியாளர், வீடுகளில் சிகிச்சை பெருவேருக்கான உதவியாளர், மருத்துவ ஆவண உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் கையாளுபவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வரை, டிப்ளமோ செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியைப் பெறலாம்.
பயிற்சி முடித்தவர்கள் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரும் வரை தாற்காலிகப் பணியிடம் வழங்கப்பட உள்ளது. பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு 0452-2560093 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம், மதுரை 7 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகாரி – ricentremdu@gmail.com