TAMIL MIXER
EDUCATION.ன்
நாமக்கல்
செய்திகள்
நாட்டுக் கோழிப்பண்ணைகள்
அமைக்க
50 சதவீத
மானியம்
நாமக்கல் மாவட்டத்தில்,
50 சதவீத
மானியத்தில்
நாட்டுக்
கோழிப்பண்ணைகள்
அமைக்கும்
திட்டத்தில்
பயன்பெற
விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியா்
ச.உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக கால்நடைப் பராமரிப்புத்
துறை
மூலம்
2023-2024ம்
நிதியாண்டில்
நாட்டுக்கோழி
வளா்ப்பில்
திறன்
வாய்ந்த
கிராம
பயனாளிகளுக்கு
சிறிய
அளவிலான
நாட்டுக்
கோழிப்பண்ணைகள்
அமைக்க
உதவும்
திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.
மாவட்டம் ஒன்றுக்கு 3 முதல் 6 பயனாளிகள் அல்லது குறைந்தபட்சம்
3 பயனாளிகளை
தேர்ந்தெடுத்து
செயல்படுத்தப்பட
இருக்கிறது.
இத்திட்டத்தில்
பயன்பெற
விருப்பமுள்ள
பயனாளிகள்,
சம்பந்தப்பட்ட
கிராமத்தில்
நிரந்தரமாக
வசிப்பவராகவும்,
கோழி
கொட்டகை
அமைக்க
குறைந்தபட்சம்
625 சதுரஅடி
நிலம்
வைத்திருப்பவராக
இருக்க
வேண்டும்.
மனித
குடியிருப்புகளிலிருந்து
விலகி
இருக்க
வேண்டும்.
நாட்டுக்கோழி
வளா்ப்பு
பண்ணை
அமைக்க
தேவையான
கோழி
கொட்டகை,
கட்டுமானச்
செலவு,
உபகரணங்கள்
வாங்கும்
செலவு,
4 மாத
தீவன
செலவு
(கோழி
வளரும்
வரை)
ஆகியவற்றுக்கான
மொத்த
செலவில்
50 சதவீத
மானியம்
(ரூ.1,50,625
அதிகபட்ச
வரையறை)
மாநில
அரசால்
வழங்கப்படும்.
மீதமுள்ள
திட்ட
செலவிற்கான
பங்களிப்பை
பயனாளி
சொந்த
செலவில்
அல்லது
வங்கி
மூலமாகவோ
திரட்ட
வேண்டும்.
ஒவ்வொரு பயனாளிக்கும்
250 எண்ணிக்கையில்,
நான்கு
வார
வயதுடைய
நாட்டுக்கோழி
குஞ்சுகள்
ஒசூா்
மாவட்ட
கால்நடை
பண்ணையிலிருந்து
இலவசமாக
வழங்கப்படும்.
விதவைகள்,
ஆதரவற்றோர்,
திருநங்கைகள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும்
பயனாளிகளில்
30 சதவீதம்
பழங்குடியினா்,
பட்டியல்
வகுப்பினராக
இருக்க
வேண்டும்.
மூன்று
ஆண்டுகள்
கோழிப்பண்ணையை
பராமரிப்பவராக
இருத்தல்
வேண்டும்.
இவ்வாறான
தகுதிகளை
பெற்றிருப்பின்,
தங்களுடைய
வீட்டின்
அருகில்
உள்ள
அரசு
கால்நடை
மருந்தகத்தில்
விண்ணப்பங்களை
அளிக்கலாம்.
இதற்கான
விண்ணப்பங்கள்
ஜூன்
12ம்
தேதிக்குள்
வந்து
சேர
வேண்டும்.