TAMIL MIXER
EDUCATION.ன்
Start up செய்திகள்
Start up நிறுவனங்களுக்கான புதிய இணையதளம்
கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 2022 நிதியாண்டில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும் அந்நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையிலும் புதிய மென்பொருள் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த இணையதளத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும், உலகத் தமிழ் முதலீட்டாளர்களை இணைக்கும் வகையில் மற்றொரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ‘Global Tamil Angels’ இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 70% அதிகம்.