‘ஓட்டுனர்களின் பழைய லைசென்சை, ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்’ என, தமிழக போக்குவரத்து கமிஷனர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் 2019 ஜனவரிக்கு பின், ஓட்டுனர் உரிமம் வாங்குவோர் மற்றும் வாகனங்கள் வாங்குவோருக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவிலான உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
அதற்கு முன் காகித வடிவில் தான் உரிமங்கள் வழங்கப்பட்டன. காகித வடிவில் இருந்து கார்டு வடிவிற்கு, ஆர். சி., புக், மற்றும் லைசென்சை மாற்ற விரும்பினால், முகவரி மாற்றம் அல்லது காணாமல் போனதற்கான தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது, இந்த காரணங்கள் இல்லாமலேயே, பழைய லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புக்கை ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு, வாகன் மென்பொருளில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பழைய உரிமங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கு, ஸ்மார்ட் கார்டுக்கு 200 ரூபாய்; சேவைக் கட்டணம் 200 ரூபாய் என 400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.