பிப். 25- டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.28 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி மற்றும் தனி யார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர் வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழ கம் ஆண்டுதோறும் நடத்தி வருகி றது. அதன்படி 2023-ஆம் ஆண்டுக் கான டான்செட் தேர்வு மார்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முது நிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால், நிகழாண்டு அதை மாற்றி, எம்இ உள்பட முதுநிலை பொறியி யல் படிப்புகளுக்காக புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக் கழகம் அமல்படுத்தியுள்ளது.
அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மாணவர் சேர்க்கை (சீட்டா)எனப் பெயரிடப்பட்டுள் ளது. இந்த சிஇஇடிஏ தேர்வு வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற வுள்ளது.
இவ்விரு தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து பட்டதாரிகள்
https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று, டான்செட் மற்றும் சிஇஇடிஏ ஆகிய இரு தேர்வுகளுக்கும் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்து உள்ளது.