திருநகர்: தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் ஜூலை 16 முதல் 21 வரை இலவச யோகாசன முகாம் நடக்கிறது.
சிறுவர்களுக்கு காலை 7:00 – 8:00 மணி வரையும், மற்றவர்களுக்கு காலை 10:00 – 12:00 மணி வரையும் சீனா யுவ யோகா மைய நிறுவனர் யோகி சிவானந்தம் பயிற்சி அளிக்கிறார். 93441 18764 ல் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு யோகாசன சங்க பொதுச் செயலாளர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.