TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
உடுமலை அரசு தொழிற்பயிற்சி
மையத்தில்,
குறுகிய
கால
திறன்
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்,
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இளைஞர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள,
பல்வேறு
பயிற்சிகளை
மேற்கொள்கின்றனர்.
ஏழை மாணவர்களுக்கு
பயனளிக்கும்
வகையில்,
தமிழக
அரசும்
திறன்
மேம்பாட்டு
பயிற்சியை
அளித்து
வருகிறது.அதன் அடிப்படையில்,உடுமலை அரசு தொழிற்பயிற்சி
நிலையம்,
தமிழக
அரசின்
திறன்
மேம்பாட்டு
கழகத்தின்
குறுகிய
கால
திறன்
பயிற்சி
அளிக்கும்
மையமாக
செயல்பட
அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்
கீழ்,
எலக்ட்ரீசியன்
டொமஸ்டிக்
சொல்யூசன்ஸ்,
தொழிற்பிரிவு,
100 நாட்கள்,
400 மணி
நேரம்
குறுகிய
கால
பயிற்சி
வகுப்புகள்
துவங்க
உள்ளன.இதில் சேர, 8, 10ம் வகுப்பு அல்லது ஒரு ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில்
பணியாற்றுபவர்கள்,
18 முதல்,
45 வயது
வரை
உள்ள,
ஆண்,
பெண்
இரு
பாலரும்
விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் இல்லை; பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன்,
முன்னணி
நிறுவனங்களில்
நல்ல
ஊதியத்துடன்,
உடனடி
வேலை
வாய்ப்பு
பெற்றுத்தரப்படும்.
பயிற்சியில்
சேருபவர்களுக்கு,
நாள்
ஒன்றுக்கு,
100 ரூபாய்
போக்குவரத்து
படி
வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர்,
உடுமலை
எலையமுத்துார்
ரோடு,
அரசு
தொழிப்பயிற்சி
நிலையத்திற்கு
நேரில்
வந்து
விண்ணப்பிக்கலாம்.